குஷ்புவின் சமூக வலைதள பக்கத்தை கைப்பற்றிய ஹேக்கர்கள்!

சென்னை: நடிகையும் பா.ஜ., பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இது குறித்து, நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எக்ஸ் தளத்தில் எனது இமெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றி உள்ளனர். ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தள கணக்கை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எக்ஸ் தள முடக்கம் குறித்து, தனியார் செய்தி சேனலுக்கு குஷ்பு அளித்த
பேட்டி:
சமூக வலைதள பக்கத்தை ஹேக்கர்ஸ் முடக்குவது தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.



2வது முறையான எனது எக்ஸ் தளக்கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளப்பக்கத்தை முடக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement