விபத்தில் கூலி தொழிலாளி பலி

சின்னசேலம்: சின்னசேலம் அருகே டிராக்டர் மீது மோதி, மொபட்டில் சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காமராஜ், 48; விவசாய கூலி. இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன் மாரிமுத்து, 54; என்பவருடன் மொபட்டில், சின்னசேலம் குரால் சாலையில் சென்றார்.

வீர பயங்கரம் பிரிவு சாலை அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிராக்டர், திடீரென நின்றது. இதனால் பின்னால் சென்ற மொபட், எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியதில், காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த புகாரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement