8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது

1

பிந்த்: மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

பிந்த் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதனால், அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும், போலீசாருக்கு

தகவலறிந்த வட்டாரங்களின்படி, சிறுமி அலறினாள், மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் வரும் வரை அந்த 17 வயது சிறுவனை பிடித்து வைத்தனர்.

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதனிடையே, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement