சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்

10

சென்னை: "சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன். வந்தவுடன் களத்தில் இறங்கி விடுவேன்" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை, போயஸ்கார்டனில் நிருபர்களை சீமான் சந்தித்தார்.

நிருபர்: தமிழகம் டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என முதல்வர் பேசியுள்ளார்?


சீமான் பதில்: முக்கியமான பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை. எங்களுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. முக்கியமான திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.


அதனால் என் மாநில வரி தர முடியாது என்று சொல்வது அவுட் ஆப் கண்ட்ரோல். உரிமையை பறிகொடுத்து விட்டு புலம்புவது அவுட் ஆப் கண்ட்ரோல் இல்லை. இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எல்லாவற்றையும் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டசபை, பார்லிமென்ட் எதற்கு? மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு போன கட்சியிடமே கூட்டணி வைத்துக் கொண்டு மாநில உரிமையை பேசுவது கேலிக் கூத்தானது.

நான் தனித்து போட்டியிடுவேன். போட்டிக்கு தயார் ஆகி கொண்டு இருக்கிறேன். சின்னத்துக்காக காத்து இருக்கிறேன். வந்த உடன் களத்தில் இறங்கிவிடுவேன். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement