பேரூராட்சி துாய்மை பணியாளரை தாக்கியவர் கைது

சின்னசேலம்: சின்னசேலத்தில் பேரூராட்சி துாய்மை பணியாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

சின்னசேலம், காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜேந்திரன், 55; பேரூராட்சியில் தூய்மை பணியாளர்.

இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு அதே அலுவலகத்தில் பணிபுரியும் வசந்தி என்பவருக்கு பணம் கொடுத்தார். அதனை ராஜேந்திரன் திரும்ப கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் உறவினரான, அதே பகுதி காந்திநகரை சேர்ந்த நடேசன் மகன் செல்வராஜ்,49; என்பவர் ராஜேந்திரனை கடுமையாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்தவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரில் வழக்கு பதிந்த சின்னசேலம் போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.

Advertisement