மாரியம்மன் கோவில் புனரமைப்பு அடிக்கல்நாட்டு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நால்லாத்துாரில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு மற்றும் மதில்சுவர் கட்ட ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை துவக்குவதற்கான, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, கட்டுமான பணிகளை துவக்கினார்.

அறநிலையத்துறை ஆய்வாளர் திருமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்மணி வடமலை, ராஜேஸ்வரி, ஊராட்சி தலைவர் மோகன் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி தலைவர் மல்லிகா, தி.மு.க., கிளை செயலாளர்கள் மயில்சாமி, அண்ணாதுரை, சுரேஷ், இளவரசன், நிர்வாகிகள் பாண்டியன், ஜெயராமன், பன்னீர்செல்வம், முத்துராஜா, அண்ணாதுரை, பெரியசாமி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement