சேதமடைந்த மக்காச்சோள வயலில் ஆய்வு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மழையால் சேதமடைந்த மக்காச்சோள வயலை, வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் பகுதியில் அரசம்பட்டு, பாலப்பட்டு, பாவளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த, 11 ம் தேதி இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில், விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், சங்கராபுரம் வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் பாதிக்கப்பட்ட மக்காச்சோள வயலை பார்வையிட்டார். ஆய்வின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், அப்பாஸ் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
Advertisement
Advertisement