கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சேகர், கவுதமி முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் செல்வராஜ் விளக்க உரையாற்றினார். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் மக்கள் விரோத செயல் மற்றும் லஞ்ச ஊழலை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நிர்வாகிகள் கந்தநாதன், சக்திவேல், ஜெயப்பிரகாஷ், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement