மாவட்டத்தில் பெரிய வியாழன் வழிபாடு கிறஸ்தவர்கள் பங்கேற்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கத்தோலிக்க சர்ச்சுகளில் பெரிய வியாழனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை ஆராதனை நடந்தன. கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில் பாதிரியார் அருள்ராயன், உதவிப் பாதிரியார் தேவராஜ் ஆகியோர் தலைமையில், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் பாதிரியார் லாரன்ஸ், உதவிப் பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், எஸ்.எப்.எஸ்.பள்ளி முதல்வர் ஆரோக்கியம் ஆகியோர் தலைமையில் திருப்பலி, 12 சீடர்களின் பாதம் கழுவும் சடங்கு ஆகியன நடந்தது.

நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந்தோணிசாமி தலைமையில், ஆர்.ஆர்.நகர் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் சாமிநாதன் தலைமையில் திருப்பலி நடந்தது.

சாத்துார் இயேசுவின் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் பாதிரியார் காந்தி, ஒத்தையால் குழந்தை ஏசு சர்ச்சில் பாதிரியார் ஜான்மில்டன் ஆகியோர் தலைமையிலும், சிவகாசி லுார்து அன்னை சர்ச், திருத்தங்கல் புனித அந்தோணியார் சர்ச், மீனம்பட்டி புனித அன்னை தெரசா சர்ச், அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் சர்ச், காரியாபட்டி புனித அன்னை சர்ச், தும்முசின்னம்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச், கிளை பங்கு சர்ச்சுகள், வடபட்டி புனித அருளானந்தர் சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நடந்தன.

இன்று புனித வெள்ளியை முன்னிட்டு மேற்கண்ட சர்ச்சுகளில் பெரிய சிலுவைப் பாதை, சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றன.

Advertisement