மாநகராட்சி வாகனத்தில் டேங்கர் சேதம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனத்தில் துருப்பிடித்த டேங்கர் சேதம் அடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் பிச்சாண்டி தெரு, தட்டாவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழாய் பதித்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது போன்ற பகுதிகளுக்கு மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனத்தில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றது.
குடிநீர் கொண்டு செல்லும் வாகனத்தின் டேங்கர் முழுமையாக துருப்பிடித்துள்ளது. இந்த வாகனம் வாங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இதன் அடிப்பகுதி சேதம் அடைந்து குடிநீர் வீணாகின்றது. குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்ற மக்கள் சேதம் அடைந்த டேங்கரால் குடிநீர் வீணாவதால் அதிருப்தியில் உள்ளனர். எனவே புதிய குடிநீர் வாகனத்தின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்