கொடி கம்பங்கள் அகற்றம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.
சிவகாசி மாநகராட்சியில் ரோட்டோரம் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை ஏப். 17 க்குள் அகற்ற வேண்டும்.
அகற்றப்படாத கொடிக்கம்பங்களை, மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்திவிட்டு அதற்குரிய தொகை சம்பந்தப்பட்ட அமைப்பிடமிருந்து வசூலிக்கப்படும் என, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று பொது இடங்களில் இருந்த 55 கொடி கம்பங்கள் கமிஷனர் மாநகரத் திட்டமிடுநர் மதியழகன், ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் இடித்து அகற்றப்பட்டது. ஒரு சில கொடி கம்பங்களை கட்சியினர் தாமாக முன்வந்து அகற்றினர். ஒரு சில இடங்களில் கட்சியினர் கொடி கம்பங்களை அகற்ற பிரச்னை செய்த நிலையில் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. மீதமுள்ள கொடிக்கம்பங்கள் நாளை அகற்றப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்