திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் பூச்சொரிதலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்கள் சொரிந்து வழிபட்டனர். இன்று மாலை காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது.
விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறந்து பூர்வாங்க பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சப்தமாதர்களில் நடுவரான வைஷ்ணவி என்ற பூமாயி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டாலாபிஷேக பூஜைகள் நடந்தன. பின்னர் அம்மன் வெள்ளி அங்கியில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பூச்சொரிந்து வழிபட்டனர். நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசித்தனர். விடிய,விடிய பூக்களை அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர்.
இன்று மாலை 5:00 மணிக்கு மேல் இரவு 7:35 மணிக்குள் அம்மனுக்கு கொடியேற்றி, காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது. தொடர்ந்து அம்பாள் கோயில்குளத்தை வலம் வருவார். தொடர்ந்து பத்துநாட்கள் வசந்தப் பெருவிழா நடைபெறும்.
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை