நுாலகத்தில் படிக்க இடவசதி ரூ.10 லட்சத்தில் மராமத்து தினமலர் செய்தி எதிரொலி

தேவகோட்டை: தேவகோட்டையில் அரசு நுாலகத்தில் 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. வாசகர்கள் , கல்லூரி மாணவ மாணவியர் அதிகளவில் வருகின்றனர். புதிய அலமாரிகள், மேஜைகள் புத்தகங்கள் வந்ததால் அதனை வைப்பதற்கே இடம் சரியாக இருந்ததால் வாசகர்கள் அமர்ந்து படிக்க இடமில்லாமல் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியானது இதனைத் தொடர்ந்து நுாலகத்தில் அலமாரிகள் ஓரமாக வைக்கப்பட்டு மேஜைகள் அகலப்படுத்தப் பட்டது. தொடர்ந்து வாசகர்கள் அமர்ந்து படிக்க இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் இட வசதி இல்லாததால் அரசோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ கூடுதல் கட்டடம் கட்டி தரவேண்டும் என வாசகர்கள் வேண்டுகின்றனர்.

இதற்கிடையில் ரூ. 10 லட்சத்தில் மராமத்து பணியும், கழிப்பறை வசதியும் பொதுப்பணித்துறை மூலம் கட்டுவதற்கு நூலகத்துறையினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

Advertisement