ரயில்வே ஆலோசனை கூட்டம் சிவகங்கை மக்கள் எதிர்பார்ப்பு
திருப்புத்துார்: மதுரையில் ஏப்.24ல் நடைபெற உள்ள தென் மாவட்ட ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ஏப்.24 ல் எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடக்கிறது.
அதில் சிவகங்கை மாவட்டத்தின் தொழில், விவசாய, சுற்றுலா தொழிலுக்கான வளர்ச்சிக்கு உதவும் வகையில் கிடப்பிலுள்ள பல புதிய ரயில் பாதைக்கான திட்டங்கள் குறித்து வலியுறுத்த வேண்டும்.
மாவட்ட தலைநகரான சிவகங்கை வழியாக செல்லும் பல ரயில்கள் இங்கு நிற்பதில்லை. குறைந்த பட்சம் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும், திண்டுக்கல் -திருப்புத்துார், -காரைக்குடி, மதுரை, திருப்புத்தூர்-, காரைக்குடி, மதுரை,- திருப்புத்துார்,- தஞ்சாவூர் உள்ளிட்ட புதிய ரயில் பாதை குறித்து மீண்டும் தென்னக ரயில்வே பரிசீலித்து ஆய்வு செய்யவும், தாலுகா வாரியாக ஆன் லைன் ரயில் டிக்கெட் புக்கிங் வசதியை அஞ்சலகங்களில் துவக்கவும், திருப்புத்துார்- கல்லல் ரயில்வே நிலையத்திற்கான நேரடி சாலை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை