அரசு ஊழியர்கள் ஊர்வலம் 

சிவகங்கை: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், மக்கள் நல பணியாளர் உள்ளிட்டோருக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி காலமுறை சம்பளம் வழங்க கோரி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் விளக்க உரை ஆற்றினார்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திரவியம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ், மாநில துணை தலைவர் பிச்சை, மக்கள் நல பணியாளர் சங்க மாநில செயலாளர் சுரேஷ்குமார், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement