ரோடு வசதி இல்லாததால் குதிரையில் ரேஷன் பொருள்
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்திற்கு ரோடு வசதியில்லாத நிலையில் ரேஷன் பொருட்கள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டது.
தரைப்பகுதியில் இருந்து கொடைக்கானலை கண்டறிய ஆங்கிலேயர்கள் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த ஊர் வெள்ள கெவி. 400 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு வசதி இல்லாத இக்கிராமத்தினர் ரேஷன் பொருட்களை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பெற்று குதிரைகள் மூலம் 7 கி.மீ., துாரம் உள்ளவெள்ளகெவி கொண்டு சென்றனர்.
இதை தொடர்ந்து தங்களுக்கு ரோடு வசதி அமைத்து கிராமத்திலே ரேஷன் பொருட்கள் சப்ளை செய்ய கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கொடைக்கானலிலிருந்து ரேஷன் பொருட்கள் குதிரை மூலம் நேற்று வெள்ளகெவி கிராமத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் கொண்டு செல்லப்பட்டது.
இதை ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு துவக்கி வைத்தார்.
நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயகண்ணன், சிவில் சப்ளை தாசில்தார் சரவண வாசன் கிராமத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு சப்ளை செய்தனர். இனி மாதந்தோறும் இது போன்ற நடைமுறை துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை