ஹொரமாவு மெயின் ரோட்டில் 15 நாளாக வழிந்தோடும் கழிவுநீர்

ஹொரமாவு: ஹொரமாவு மெயின் ரோட்டில் கடந்த 15 நாட்களாக, சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. எம்.எல்.ஏ., மாநகராட்சி, வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
பெங்களூரு கே.ஆர்.புரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஹொரமாவு மெயின் ரோட்டில், சாக்கடை கால்வாய் மூடி உடைந்ததால், கடந்த 15 நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் மக்கள், கடும் அவதி அடைந்து உள்ளனர். துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து கொண்டு, பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
கழிவுநீரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வோர், கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுகின்றனர். வேகமாக வரும் வாகனங்களின் டயர்கள் சிதற அடிக்கும் கழிவுநீர், சாலையில் நடந்து செல்வோர் மீது படுகிறது.
கே.ஆர்.புரம் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் தினமும் இந்த வழியாக தான் செல்கிறார். கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதை தடுக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாநகராட்சி, வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை மொபைல் போனில் அழைத்து, தகவல் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று, மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் வடிகால் வாரிய ஊழியர்கள் வந்தனர். 'கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க, சாலையில் பள்ளம் தோண்ட வேண்டும். இது வாகன நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், போக்குவரத்து போலீசார் அனுமதி தர மாட்டார்கள்.
'நீங்கள் வேண்டும் என்றால் அனுமதி வாங்கி தாருங்கள்; நாங்கள் வேலை செய்கிறோம்' என்று, பொதுமக்களிடம் கூறினர்.
'இது எந்த விதத்தில் நியாயம்' என்று, மக்கள் கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து சென்று விட்டனர்.
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை