பெண் டாக்டரின் 6 சவரன் திருட்டு; ஊட்டி போலீசார் விசாரணை
ஊட்டி; ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் டாக்டர் தம்பதியின், 6 பவுன் செயின் காணாமல் போனதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கோவையை சேர்ந்த டாக்டர் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன், ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். ஊட்டி படகு இல்ல சாலையில் பிரபல தனியார் ஓட்டலில் தங்கி உள்ளனர். பெண் டாக்டர் தனது, 6 பவுன் தங்க செயினை கழற்றி ஜன்னல் ஓரம் வைத்துவிட்டு அறையை பூட்டிவிட்டு, உணவகத்திற்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
மீண்டும் அறைக்கு வந்தபோது தங்க செயினை காணவில்லை.
தொடர்ந்து, டாக்டர் தரணி, ஊட்டி ஜி1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். டவுன் டி.எஸ்.பி., நவீன்குமார் உத்தரவின் பேரில், எஸ்.ஐ. செந்தில் குமார் தலைமையில் போலீசார், ஓட்டல் உட்பட பிற இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
Advertisement
Advertisement