கர்நாடக தமிழர்கள் கீழடி பயணம்

பெங்களூரு: -தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவருமான எஸ்.டி.குமார் தலைமையில் தமிழகம் கீழடிக்கு 35 பேர் கொண்ட குழுவினர் இன்று புறப்படுகின்றனர்.

இது தொடர்பான அறிக்கை:

பெங்களூரில் இருந்து, இன்று (18ம் தேதி) பெங்களூரு திருவள்ளுவர் சங்க நிர்வாகிகள், கர்நாடக தமிழ் மக்கள் இயக்க துணைத் தலைவர் பண்முகன், தாய்மொழி கூட்டமைப்பு முனுசாமி, பெங்களூரு தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, சந்திரிகா, எச்.ஏ.எல்., தமிழ் மன்ற செயலர் பாலாஜி.

பெங்களூரு தமிழ் மன்ற துணை செயலர் ஆஞ்சநேயன், எம்.ஜி.ஆர்., மன்ற சடகோபன், சாம்ராஜ் நகர் தமிழ் சங்கத்தின் சூரியா, பெங்களூரு வள்ளலார் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் உட்பட 35 பேர் கொண்ட குழுவினர் புறப்படுகின்றனர்.

இவர்களுக்கு நாளை (19ம் தேதி) கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சங்கம் வரவேற்பு அளிக்கிறது. அதன்பின், திருவள்ளுவர் சிலை முன் நின்று திருக்குறள் முற்றோதுதல் பாடி, சிலைக்கு மரியாதை செய்கின்றனர்.

மறுநாள் 20ம் தேதி மதுரை தமிழ் அமைப்புகள் வரவேற்பை பெற்று, அவர்களின் வழிகாட்டுதலில், கீழடி பயணம் செய்து, தமிழனின் தொல் பெருமையை காண்கின்றனர்.

அன்றிரவு 8:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, பெங்களூரு வருகின்றனர்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement