40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி

புதுச்சேரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில், கர்நாடக பெண்கள் அணி, வெள்ளிப்பதக்கம் வென்றது.
புதுச்சேரியில் உள்ள ராஜிவ்காந்தி உள் விளையாட்டு மைதானத்தில், 40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி நடந்தது. அரையிறுதி போட்டியில், சத்தீஸ்கரை தோற்கடித்த கர்நாடக அணி, இறுதி சுற்றுக்கு தேர்வானது. நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், கர்நாடகா அணியும், மஹாராஷ்டிரா அணியும் மோதின.
கர்நாடகாவின் மெஹக் சர்மா 16 புள்ளிகளும், அணி கேப்டன் அதிதி சுப்பிரமணியன், நிரிஷா ஆகியோர் தலா 10 புள்ளிகளும் பெற்றுத்தந்தனர்.
ஆனால், மஹாராஷ்டிரா அணியின் ரேவா குல்கர்னி 26 புள்ளிகளும், வைஷ்ணி 25 புள்ளிகளையும் பெற்று, அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
பரபரப்பான ஆட்டத்தில், இறுதியில் மஹாராஷ்டிரா 76 புள்ளிகளும், கர்நாடகா 49 புள்ளிகளும் பெற்றன. இரண்டாம் இடம் பிடித்த கர்நாடக அணிக்கு, வெள்ளி பதக்கத்துடன் 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும், எப்.ஐ.பி.ஏ., ஆசிய தலைவர் கோவிந்தராஜ், 5 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகையை அறிவித்தார்
- நமது நிருபர் -
.
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை