கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து; இத்தாலியில் 4 பேர் பரிதாப பலி

மிலன்: இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், சுற்றுலா பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் விரிகுடா மற்றும் வெசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நேப்பிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற கேபிள் காரில், கேபிள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். தற்போது கேபிள் கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
18 ஏப்,2025 - 12:11 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
Advertisement
Advertisement