மயானத்திற்கு பாதை கேட்டு சடலத்துடன் போராட்டம்

கடலுார்: கடலுார் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார், துாக்கணாம்பாக்கம் அடுத்த நாராயணபுரத்தை சேர்ந்த மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை நேற்று மாலை அடக்கம் செய்ய அதே பகுதிக்கு எடுத்து சென்றனர்.
அப்போது, பல முறை கூறியும் மயானத்திற்கு செல்ல பாதை அமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தென்னம்பாக்கம்-நாராயணபுரம் சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 5:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறையினர் மற்றும் துாக்கணாம்பாக்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று, நிலத்தின் வழியாக சடலத்தை எடுத்துச் சென்று, மலட்டாற்றில் அடக்கம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
Advertisement
Advertisement