விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு

3

கோவை: சோமனூரில் விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக பா.ஜ., ஆதரவு அளித்து உள்ளது.


கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்., 11 முதல், ஐந்து நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் சோமனுாரில் நடந்தது. ஜவுளி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி சங்கத்தினருடன் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால், வேலை நிறுத்தத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.


இந்நிலையில், உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும், அரசிடம் வலியுறுத்துவதாகவும் உறுதி அளித்து உள்ளார்.

Advertisement