அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை

பாரீஸ்: '' ரஷ்யா - உக்ரைன் இடையிலான நடக்கும் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், அமைதி ஒப்பந்த முயற்சியில் இருந்து அதிபர் டிரம்ப் விலக நேரிடும்,'' என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் 3 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் போர் எப்போது முடிவடையும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ரஷ்யா - உக்ரைன் இடையே போரை நிறுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டார். இது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது.
ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா- ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். ஆனால், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாக்குதல் தொடர்கிறது. இதில் உயிரிழப்பும் நீடிக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை அதிபரான 24 மணி நேரத்தில் நிறுத்துவேன் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது: போர் நிறத்தத்திற்கான அறிகுறி எதுவும் தென்படாவிட்டால், அமைதி முயற்சியை அமெரிக்கா கைவிடும். நாங்கள் வாரக்கணக்கில் அமைதி ஒப்பந்த முயற்சியை தொடர விரும்பவில்லை. இப்போதே விரைவாக தீர்மானிக்க வேண்டும். போர் நிறுத்தம் சாத்தியமா இல்லையா என்பதை பற்றி அடுத்த சில வாரங்களில் பேசுகிறேன்.
போர் நிறுத்த விஷயத்தில் அதிபர் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் நிறைய நேரத்தையும், சக்தியையும் செலவு செய்துள்ளார். இது முக்கியமான விஷயம் தான். ஆனால், இதனையும் தாண்டி இன்னும் அதிக கவனம் அல்லது கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.
அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வது நம் முன் உள்ள ஒரு பிரச்னை. அதேநேரத்தில் இது சாத்தியமாகுமா என்பதை நாம் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சவாலும் நம் முன் உள்ளது. ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாக தெரிந்தாலும் அது விரைவில் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் இருக்க வேண்டும்.
இதை 12 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் எனயாரும் சொல்லவில்லை. ஆனால், அது எவ்வளவு தூரம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும் அந்த வேறுபாடுகளைக் குறைக்க முடியுமா என்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
18 ஏப்,2025 - 20:32 Report Abuse

0
0
Srinivasan Krishnamoorthy - Chennai,இந்தியா
18 ஏப்,2025 - 22:42Report Abuse

0
0
Reply
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
Advertisement
Advertisement