நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: சுங்கக்சாவடிகளில் செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இங்கு ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, 2021ம் ஆண்டு பிப். முதல் பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது.
கோடிக்கணக்கானோர் இந்த நடைமுறையை பயன்படுத்தி வரும் தருணத்தில், செயற்கைக்கோள் மூலமாக இனி கட்டணம் வசூலிக்கப்படும். மே 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சுங்கக்சாவடிகளில் செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அளித்து உள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது;
மே 1, 2025 முதல் நாடு தழுவிய அளவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச்சாவடியை செயல்படுத்துவது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமோ அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ (NHAI) அத்தகைய எந்த முடிவும் எடுக்கவில்லை.
சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்கள் தடையின்றி, தடையின்றி பயணிக்க உதவும் வகையிலும், பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ' ANPR-FASTag-அடிப்படையிலான தடையற்ற கட்டண முறை' செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்