நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்

9

சென்னை: நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.


@1brமதுரையை தலைமையிடமாக கொண்டது நியோமேக்ஸ் நிதி நிறுவனம். பல்வேறு நகரங்களில் அலுவலகங்களை தொடங்கி மக்களிடம் முதலீடுகளை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், முகவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.


2023ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், வழக்கு பதியப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மீதான வழக்கு நிலுகையில் உள்ளது. இந்த விசாரணையின் போது குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனத்தின் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.


இந் நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;


நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் அதுதொடர்பான வழக்கில், 2002ம் ஆண்டு PMLA விதிகள் படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் உள்ள ரூ.12.1.80 கோடி(அதன் தற்போதைய மதிப்பு ரூ.600 கோடி) மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் ஏப்.9ம் தேதி தற்காலிகமாக முடக்கி உள்ளது.


இவ்வாறு அமலாக்கத்துறை பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement