காரியாபட்டி நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

காரியாபட்டி:
காரியாபட்டியில் வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் கோர்ட்டுக்குநிரந்தர கட்டடம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.

காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. தற்காலிகமாக பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இங்கு அடிப்படை வசதிகள் சரிவர கிடையாது.

கூடுதலாகவும் அடிப்படை வசதிகளை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. நீதிமன்றத்திற்கு எதிரில் ஊருணி உள்ளது. அதில் முழுக்க கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நீதிமன்றத்திற்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். வழக்கு தொடர்பாக அப்பகுதியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. துர்நாற்றத்தால் முகம் சுளிக்கின்றனர்.

பகலில் கொசு கடிக்கிறது. வாகனங்கள் நிறுத்த இடம் கிடையாது. வாகனங்களில் வருபவர்கள் ரோட்டோரத்தில் நிறுத்துகின்றனர். ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. காரியாபட்டியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை தடுக்கவேண்டும்.

வாடகை கட்டடத்தில்இயங்கி வரும் நீதிமன்றத்திற்கு பயன் உள்ள வகையில் இடத்தை தேர்வு செய்து நிரந்தர கட்டடம் கட்ட வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.

Advertisement