- கே.வி., பள்ளிகளுக்கான வில்வித்தை சென்னை பள்ளி மாணவர்கள் அபாரம்

சென்னை,
மத்திய அரசின் பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான மண்டல விளையாட்டு போட்டிகள், பல்வேறு இடங்களில் நடக்கின்றன.
மீனம்பாக்கத்தில் உள்ள பி.எம்., ஸ்ரீ கேந்திரியா வித்யாலயா பள்ளி சார்பில், சென்னை மண்டலங்களுக்கு இடையிலான வில்வித்தை போட்டி, அதே வளாகத்தில் இரு நாட்களுக்கு முன் நடந்தன.
போட்டியில் சென்னை மண்டலமான தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்து, 540 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைத்து போட்டிகள் முடிவில், கில்நகர் கே.வி., மாணவர் ஹேமந்த், அண்ணா நகர் கே.வி., பள்ளி மாணவர் பாலா காவியன், ஆதிகிரன் மற்றும் ஆவடி கே.வி., மாணவர் ஆகாஷ் ஸ்ரீஜெய், அடையாறு கே.வி., பள்ளி சங்கமித்ரா ஆகியோர், பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர்.
இவர்கள், ஆகஸ்ட் மாதம் ஹைதராபாதில் நடக்கவுள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு