மே 1ல் செஸ் போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு

சென்னை, வேலம்மாள் போதி கேம்பஸ் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில சதுரங்க போட்டி, பள்ளிக்கரணையில் உள்ள கேம்பஸ் வளாகத்தில், வரும் 1ம் தேதி நடக்கிறது.

இதில், எட்டு, பத்து, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. இரு பிரிவிலும் வெற்றி பெற்றுவர்களுக்கு, கோப்பையும், பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன. போட்டிகள் 'பிடே' விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் நடக்கின்றன.

சென்னை உட்பட அனைத்து மாவட்ட சிறுவர்களும் போட்டியில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், இம்மாதம் 29ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 72001 01544, 90255 50348 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement