புதிதாக 100 சிற்றுந்துகள் தயாரிக்கிறது எம்.டி.சி.,
சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், தற்போது 100 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை, முக்கிய பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், இயக்கப்படுகின்றன.
மேலும், பல்வேறு வழித்தடங்களை இணைக்கும் வகையில், சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். போதிய சிற்றுந்துகள் இல்லாததால், புதிய வழித்தடங்களில் அவற்றின் சேவையை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவையும் அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக, குறுகிய துாரங்களை இணைக்கும் வகையில், சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
அதனால், ஏழு ஆண்டுகளுக்கு பின், 100 புதிய சிற்றுந்துகள் தயாரிப்பு பணியை துவங்கி உள்ளோம். இந்த சிற்றுந்துகள், அடுத்த ஆறு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். இவை வந்தவுடன், பழைய சிற்றுந்துகளுக்கு மாற்றாக, புதிய வழித்தடங்களில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு