கூடுதலாக கடன் தொகை வசூல் வங்கிக்கு ரூ.20 லட்சம் அபராதம்
சென்னை, கடன் தொகையை கூடுதலாக வசூலித்த தனியார் வங்கிக்கு, 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர், கோடக் மஹிந்திரா என்ற வங்கியில், கடந்த 2007ம் ஆண்டு, தன் வீட்டை அடமானம் வைத்து, 1.50 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
முதிர்வு காலம் முடியும் முன், அடுத்த ஆண்டே அந்த கடனை அடைக்க, கேட்பு காசோலை வாயிலாக, 1.70 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார். ஆனால், வங்கி நிர்வாகிகள், கடன் தொகையில், 14.30 லட்சம் ரூபாய் கூடுதலாக வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செல்வராஜ் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்துள்ளனர்.
மோசடி தொடர்பாக, 2006ல் வங்கி அதிகாரிகளாக இருந்த நாராயணன், ஆனந்தன் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த மோசடி தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சம்மந்தப்பட்ட வங்கிக்கு, 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த, 20 லட்சம் ரூபாயில், 10 லட்சம் ரூபாயை புகார்தாரருக்கு நிவாரண தொகையாகவும், 10 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் அபராத தொகையாகவும் செலுத்தவும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு