பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த துாய்மை பணியாளர் உயிரிழப்பு
எண்ணுார், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரஞ்சித்தகுமார், 38; தனியார் நிறுவன துாய்மை பணியாளர். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக, இரு மாதங்களுக்கு முன், நந்தினி தன் பிள்ளைகளுடன், கொருக்குப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
அந்த விரக்தியில் இருந்த ரஞ்சித்குமார், நேற்று முன்தினம் இரவு, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பின் 103வது பிளாக் அருகே, பெட்ரோலை உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்கவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித்குமார், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு