பொது பெண்ணிடம் சில்மிஷம் ஆசாமிக்கு தர்ம அடி

சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண், பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை 10:00 மணியளவில், அபிபுல்லா சாலை வழியாக அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த போதை ஆசாமி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே, அவர் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஒன்றுக்கூடி, போதை ஆசாமியை நையப்புடைத்து, தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், தி.நகர், தர்மாபுரம் 8வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 34, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement