ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்

புத்தேரி:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் இருந்து, அச்சுகட்டு கிராமம் வழியாக, சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, பாக்குபேட்டை, விநாயகபுரம், வேலுார் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை, ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால், இச்சாலையில், செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. மேலும், காலணி அணியாமல் நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள புத்தேரி --- சிறுகாவேரிபாக்கம் சாலையை சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement