வேளாங்கண்ணியில் புனித வெள்ளி திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்,:வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று மாலை நடந்த புனித வெள்ளி நிகழ்ச்சிகளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினமான நேற்று அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திவ்ய நற்கருணை ஆராதனை பல்வேறு தரப்பினர் நடத்தினர். .
அடைக்கல அன்னை அருட் சகோதரிகள், மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனை நடத்தினர்.
தொடர்ந்து தேவாலய கலையரங்கில் மாலை,6.30 மணிக்கு, தேவாலய பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமையில், 20 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு திருப்பலியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது