தாளபுரீஸ்வரர் கோவில் குளத்தை புதுப்பிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு

உத்திரமேரூர்:திருவண்ணாமலை மாவட்டம், திருப்பணங்காடு கிராமத்தில், கிருபாநாயகி சமேத தாளபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், சிவராத்திரி, மாசி மகம், பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.
இங்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் திரளாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள ஜடா தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடி, இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜடா தீர்த்த குளம் பராமரிப்பின்றி பழுதடைந்து, கரைகள் சரிந்து காணப்படுகின்றன. இதை புதுப்பிக்க பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2024 --- 25ம் நிதி ஆண்டில், கோவில்கள் புதுப்பிப்பு திட்டத்தின்கீழ், 1.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, ஜடா தீர்த்த குளத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் துவக்க உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது