லிங்காபுரம் சாலையில் மரண பள்ளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், சங்காபுரத்தில் இருந்து, லிங்காபுரம் வழியாக தேவேரியம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. சங்கராபுரம், லிங்காபுரம், கொசப்பட்டு உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், சங்கராபுரம் அடுத்த, லிங்காபுரத்தில் இருந்து, தேவேரியம்பாக்கம் வரையிலான 2 கி.மீ., துாரம் சாலை பழுதடைந்து, ஆங்காங்கே மரண பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.

ஏற்கனவே குறுகியதான இச்சாலையில், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். இந்நிலையில், சாலை பள்ளங்களால் மேலும் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே, இச்சாலையில் பழுதான பகுதிகளை சீரமைப்பதுடன், அகலப்படுத்தி தர அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement