தரங்கம்பாடியில் உலக மரபு தின விழா

மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் தொல்லியல் துறை சார்பில் நேற்று உலக மரபு தின விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலக மரபு தினத்தையொட்டி, தொல்லியல் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள வரலாற்றுச் சின்னமான டேனிஷ் கோட்டையில் நேற்று 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா நேற்று காலை டேனிஷ் கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நடந்தது. மரபுசார் கலை நிகழ்ச்சிகளை தொல்லியல் அலுவலர் வசந்தகுமார் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

வரும் 24ம் தேதிவரை அனைவரும் டேனிஷ் கோட்டை மற்றும் கோட்டையின் உள்பகுதியில் உள்ள தொல்லியல் அகழ் வைப்பகத்தை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம். மேலும், 24ம் தேதி மரபுசார் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement