பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

நியூயார்க்: பஞ்சாபில், 14 பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் என்ற ஹேப்பி பாசியா, அமெரிக்காவில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபின் அமிர்தசரசை சேர்ந்தவர் ஹர்ப்ரீத் சிங். பயங்கரவாதியான இவர், கடந்த ஜனவரியில் அமிர்தசரஸில் உள்ள கும்தாலா போலீஸ் ஸ்டேஷன் அருகே, மூத்த அதிகாரியின் வாகனத்தை குண்டு வைத்து தகர்த்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றிருந்தார்.
பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இவர் மீது பஞ்சாபில், 14 பயங்கரவாத தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடித்து கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.
இந்தியாவில் தீவிரமாக தேடப்படும் பயங்கரவாதியான இவருக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடனும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சா இன்டர்நேஷனல் உடனும் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாபில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய இவர், பஞ்சாப் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேக்ரமென்டோ நகரில் ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்துள்ளனர்.






மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது