வகுப்பறையில் மாணவனை தாக்கிய கல்லுாரி விரிவுரையாளர் சஸ்பெண்ட்

பழநி:பழநி பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் மாணவனை கவுரவ விரிவுரையாளர் தாக்கிய வீடியோ பரவியதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி செயல்படுகிறது. சில நாட்களுக்கு முன் வணிகவியல் துறை கவுரவ விரிவுரையாளர் கவுதமன் வகுப்பறையில் மாணவனை தாக்கும் வீடியோ பரவியது. இதில் நாற்காலியால் மாணவனை தாக்குவது போலவும் அதை மற்ற மாணவர்கள் பார்த்து சிரிப்பது போலவும் உள்ளது.

இதைதொடர்ந்து கவுதமனை சஸ்பெண்ட் செய்த கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவன் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement