மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூரில் பழமை வாய்ந்த பிள்ளையார், மாரியம்மன் மற்றும் அம்மச்சார் அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கடந்த 9ம் தேதி பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது.
தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில், கடந்த 15ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து மண்டல ஆராதனை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அடுத்த நாள், இரண்டாவது கால யாகசாலை பூஜை, துவாரபூஜை, சூர்யகலச பூஜை, பூர்ணாகுதி, மூன்றாம் கால யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் நான்காவது கால யாகசாலை பூஜைகளும், மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, கலசஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 10:00 மணிக்கு, கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது