மரக்கன்று நடும் விழா மாவட்ட நீதிபதிகள் பங்கேற்பு

காஞ்சிபுரம்:பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோளிவாக்கம் கிராமத்திலும், அங்குள்ள தனியார் மருந்தியல் கல்லுாரி வளாகத்திலும், கீழம்பி - செவிலிமேடு புறவழிச் சாலையிலும், சட்ட பணிகள் ஆணைக்கு சார்பில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி செம்மல் தலைமையில் நேற்று நடந்தது.

நீதிபதிகள் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர்.

இந்நிகழ்ச்சியில், வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் அருண்சபாபதி வரவேற்புரை ஆற்றினார். தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, கூடுதல் சார்பு நீதிபதி திருமால், வழக்கறிஞர்கள், நிர்வாக உதவியாளர் சதீஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மரம் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, தனியார் மருந்தியியல் கல்லுாரியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், விழிப்புணர்வு முகாம், நீதிபதி செம்மல் தலைமையில் நடந்தது.

அப்போது, பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டனர். அதற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement