40 ஆண்டுகளுக்கு பின் விண்வெளி செல்லும் இந்தியர்

புதுடில்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான பயிற்சி இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் வழங்கப்படுகிறது.
இந்த நான்கு வீரர்களில் ஒருவர் சுபான்ஷு சுக்லா. இவர் விமானப் படையின் குரூப் கேப்டனாக உள்ளார்.
கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்க விண்வெளி நிறுவனங்களான 'நாசா' மற்றும் 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஆக்ஸியம் ஸ்பேஸ், நாசா உடன் இணைந்து, ஏ.எக்ஸ்.4 என்ற விண்வெளி பயண திட்டத்தை மே மாத இறுதியில் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவும் ஒருவர். அவருடன் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளின் வீரர்களும் பயணிப்பர். இந்த திட்டத்தின் பைலட்டாக சுபான்ஷு சுக்லா செயல்பட உள்ளார்.
இவர்கள் நான்கு பேரும் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், 'க்ரூ டிராகன்' விண்கலம் வாயிலாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளனர்.
அங்கு, 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின், பூமிக்கு திரும்புவர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது