வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த்துறையில் துணை தாசில்தார் நிலையில் பணிபுரியும், 2 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில், மண்டல துணை தாசில்தாராக பணிபுரியும் பாலசுப்ரமணியனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, கள்ளக்குறிச்சி வன நிர்ணய தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில், தலைமை உதவியாளராக பணிபுரிந்த அருள்மொழிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மை பிரிவில் தாசில்தாராக பணிபுரிந்த பாஸ்கரன், கள்ளக்குறிச்சி ஆலய நிலங்கள் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் 3 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement