பசு மாடு மீட்பு
திருச்சுழி:
திருச்சுழி அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருச்சுழி அருகே கோணப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்கு சொந்தமான பசு மாடு மேய்ச்சலுக்குச் சென்ற போது எதிர்பாராத நிலையில் அங்கிருந்த தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
இது குறித்து திருச்சுழிதீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை டிராக்டர் உதவியுடன் கயிறு கட்டி மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
Advertisement
Advertisement