இருள் சூழ்ந்த திருக்கச்சூர் பகுதி மின் விளக்கு அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை 25 கி.மீ., உள்ளது.
இச்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் ஆப்பூர், தெள்ளிமேடு, திருக்கச்சூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், திருக்கச்சூர் ஆபத்துக்கால்வாய் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் மீது செல்லும் சாலையும், பழைய ரயில்வே கேட் செல்லும் சாலையும் இரண்டாக பிரிந்து அகலமாக செல்கின்றன.
இந்த பகுதியில் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மேம்பாலத்தில் இருந்து கீழே வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே இந்த பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகள் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு