குருஞான சம்பந்தர் பிரதிஷ்டை

ஸ்ரீவில்லிபுத்துார்:
ஸ்ரீவில்லிபுத்துார் வடக்கு ரத வீதியில் உள்ள குருஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளின் அவதார இல்லத்தில்அவரது விக்ரஹ பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், தருமையாதீனம் தலைமையில் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று காலை யாகபூஜை, ஜபம், ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. பின் விக்ரஹம் பிரதிஷ்டை, மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் தருமையாதீனம் அருளாசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Advertisement