மொபைல் போன்கள் திருட்டு 

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரை சேர்ந்தவர், பொன்வேல் மகன் சதகுருநாத், 31; இவர், நேப்பால் தெருவில் 'ஸ்கேன்' சென்டர் வைத்துள்ளார்.

நேற்று காலை, இந்த சென்டரில் உள்ள 'லேப்' அறைக்கு சென்ற மர்மநபர் ஒருவர் அங்கிருந்த 3 ஆன்ட்ராய்டு மொபைல்களை திருடி சென்றார். இதன் சி.சி.டி.வி., பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்த புகாரில், கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement