ஆமைவேகத்தில் 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணிகள் : உத்தமபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பேரூராட்சியில் அம்ரூத் திட்ட பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருவதால் 15 நாட்களுக்கு ஒருநாள் குடிநீர் வினியோகிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 32 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 4500 குடிநீர் வீட்டு இணைப்புகள் உள்ளன. 10.70 லட்சம் கொள்ளவு கொண்ட 7 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளும் உள்ளன.
ஆனாலும் மக்கள் தொகை பெருக்கத்தால் குடிநீர் தேவை அதிகரித்தது. எனவே குடிநீர் அபிவிருத்தி பணிகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதற்கென அம்ருத் 2.0. திட்டத்தின் கீழ் ரூ.29.60 கோடியில் 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாற்றில் புதிய உறைகிணறு அமைப்பது,
11,503 மீ., நீளத்திற்கு மெயின் பகிர்மான குழாய் பதிப்பது, குடிநீர் விநியோக குழாய்கள் 60,668 மீ., நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டது.
25.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 13 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட உள்ளது.
இதன் மூலம் புதிதாக 5,586 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க பேரூராட்சி முடிவு செய்துள்ளது.
ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற நிலை உள்ளது.
அம்ரூத் பணிகள் நிறைவு பெறாததால், அரசிடம் இருந்து வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பணிகளை விரைந்து முடிக்கவும், குழாய் பதிக்க தோண்டிய வீதிகளை பராமரிக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது