மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா

விக்கிரவாண்டி, ; விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விக்கிரவாண்டி தாலுகா ஆசூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் யுவராஜ், இலவச மனைப்பட்டா வழங்கினார்.

இளநிலை உதவியாளர் புஷ்பவள்ளி, உதவியாளர் அரவிந்த் சதீஷ், சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சுந்தரராசு, செயலாளர் கண்ணதாசன், துணை செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தணிகைவேல் முருகன், நகரசெயலாளர் அண்ணாமலை, பழனி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement